Wednesday, April 15, 2009


கல்லூரியின் முடிவில் தனித்து விடப்பட்டு நிற்கிறது நம் நட்பு .
கல்லூரி இறுதி நாட்களில் ,
நாம்.
நான்,
நீ..................

1 comment:

  1. அவனும் அவளும் ......

    அவனும், அவளும்
    நேரங்களைத் தொலைத்து
    நேசம் பேசிக்கொள்கிறார்கள் ....

    அவன் அவளுக்காக பூக்களை காட்டி
    காதலை வீசியபோது ,
    அவள் அவனுக்காக பூக்களாய் வீசினாள்
    நட்சத்திரங்களை...
    அவன் தினப்பொழுதுகளின் ,
    சாமத்தில் வந்து அவனுக்காகச்
    சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் .

    பாசம் மீளுகையில் ,
    அவன் அவளை
    புகைப்படம் எடுத்துக் கொள்கிறான்,
    மின்னலாய் அவளும் தான்...

    எத்தனையோ பேர் இருக்க என்னை
    மட்டும் ஏன் காதலித்தாய் என்றான் அவன் .
    அவளோ, நிலா நீங்கள் மட்டும் தானே என்றாள்.
    ஆம்.நிலவுக்குத்தானே நிலவை பிடிக்கும்...

    இருந்தபோதும் அவ்வப்போது
    அவள்கள் காதலில் விரிசல் விழும் .

    அவனுக்கென அழகாய் வந்தவள்,
    அவனின் இரவுகளில்,ஏனோ
    நட்சத்திரங்களுடன் போய்
    படுத்துக் கொள்கிறாள்......

    அவன் கட்டிவைத்த இரவுகளில்
    அவள் சிரிக்கிறாள்.
    அவள் களைந்து போன இரவுகளில்
    அவன் அழுகிறான்.

    அவள் மஞ்சள் புன்னகை
    அவனுக்கு வெளிச்சம் ! அவர்
    அவள் சுதந்திரம் அவனுக்கு இருட்டு...

    ஆம். அமாவாசை இரவுகளில் மட்டும்
    அவள் இறந்து போவாள்,
    அதனால் அவனும் தான்...

    நிலாவிற்காக நிலாப்ரியன்...............

    ReplyDelete