அரேபிய இரவுகள்.....
தோகா,
அரபு தேசத்தின் தமிழ்நாடு...
அங்கே, சின்னதாய்
ஒரு புறாக் கூடு,
அதிலே நாற்பது தலைகள்,
எல்லாம் தமிழ் தலைகள்...
இங்கே வெய்யில் அதிகம் ,
காரணம், தேசம் கடந்து வந்த தமிழன்
தன் தூக்கம் தொலைத்து ,
தொலைப்பேசியில் நேசம் விட்டுக் கொண்டிருப்பதும் ,
கடமையின் காரணமாய் தங்களின் மெய்யான
கனவுகள் தொலைத்து வாழ்வதும்
காரணம் என்கிறார்கள்...
இங்கே இரவில்
வானம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும் என்
தமிழ் தலைகளுக்கு
நட்சத்திரங்கள் அவன் உறவுகளின்
நேசம் சொல்லிக் கொண்டிருக்கும்...
அவனுக்கு திருமணம் நேற்று தான் முடிந்தது,
ஆசை அறுபது,மோகம் முப்பதென
தேவை தொண்ணூறு நாட்கள் , ஆனால்
அவனுக்கு இருப்பதோ முப்பது நாட்கள்
மட்டுமே . உறவுகளின் விருந்திலேயே
அவன் விடுமுறைகள் முடிந்து போகும் ,
தன் உறவுக்கானவளை உணர்ந்து கொள்வதற்குள்ளே
அரேபியா அவனை அழைத்துக் கொண்டிருக்கும்....
அரேபிய இரவுகள் அதிகமான தூக்கத்தை காட்டிலும்
துக்கத்தை சொல்லிக்கொண்டிருக்கும்,
காதலையும், கனவுகளையும் சுமந்தே
சுகம் தேடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசத்தின் தவிப்புகள் இங்கே தவிப்புகளாய்.....
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)

nice.. anand..
ReplyDeleteg8 way of expressing d feelings..
wonderful lines..
keep on writting...
mudiyala.... irunthallum nalla irukku...
ReplyDeleteMr. Anandaraj.. Why you finished your blog with just three enteries. So bad..
ReplyDeleteI'm expecting a lot from you..
Hope you may busy with your work..